உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இந்திய ஜனநாயக கட்சி செயல் வீரர்கள் கூட்டம்

இந்திய ஜனநாயக கட்சி செயல் வீரர்கள் கூட்டம்

புதுச்சேரி : அரியாங்குப்பம் தொகுதி இந்திய ஜனநாயக கட்சியின் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மணவெளி மாவீரர் அரங்கில் நடந்தது. மாநில செயலாளர் சத்தியானந்தம் தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் சத்தியவேல், இளைஞரணி தலைவர் வீரசேகரன், செயல் தலைவர் ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், புதுச்சேரியின் வரலாற்றைப் பறைசாற்றும் அரிக்கன் மேடு பகுதியை அரசு அகழ்வாராய்ச்சி செய்து அதனைச் சுற்றுலா மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியாங்குப்பம் சுண்ணாம்பாற்றுப் பாலத்தைப் பொதுப்பணித்துறை சீரமைக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்