உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கணினி பயிற்சி மையங்களில் நேரடி சேர்க்கை துவக்கம் 

 கணினி பயிற்சி மையங்களில் நேரடி சேர்க்கை துவக்கம் 

புதுச்சேரி: பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகம் சார்பில், நடத்தப்படும் கணினி பயிற்சி மையங்களில் நேரடி சேர்க்கை துவங்கி உள்ளது. இதுகுறித்து மேலாண் இயக்குநர் ராகிணி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கழகம் சார்பில், வில்லியனுார் மற்றும் கிருமாம்பாக்கத்தில் மத்தி ய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் தேசிய திறந்த வெளிப்பள்ளி நிறுவனத்தின் கீழ் கணினி பயிற்சி மையங்கள் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் பல்வேறு வகையான 6 மாத தொழிற் சார்ந்த கணினி பயிற்சி வகுப்புகள் பகுதி நேர முறையில் நடத்தப்பட்டு வருகிறது. பயிற்சி மையங்களில் கணினி பயிற்சி வகுப்பு களில் சேருவதற்கான புதுச் சேரியை சார்ந்த பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் ஆண்கள் மற்றும் பெண்கள், மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, நேற்று முதல் வரும் 31ம் தேதி வரை நேரடி சேர்க்கை நடக்கிறது. எனவே, பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் தங்கள் அருகாமையில் உள்ள கணினி பயிற்சி மையங்களை தொடர்பு கொண்டு, பயிற்சியில் சேர்ந்து ப யன்பெருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பயிற்சிக்கான விவரங்களுக்கு கணினி பயிற்சி மையங்கள் வில்லியனுார் - 0413 2666767, கிருமாம்பாக்கம் - 0413 2611776 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ