உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தலைக்கும், தண்டுவடத்திற்கும் பாண்டியில் சலுகை அறிவிப்பு

தலைக்கும், தண்டுவடத்திற்கும் பாண்டியில் சலுகை அறிவிப்பு

புதுச்சேரி; சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு, மத்திய அரசு 1.50 லட்சம் ரூபாய் வரை பணமில்லா சிகிச்சை வழங்கும் திட்டத்தை துவங்கி உள்ளது. புதுச்சேரியில் இத்திட்டம் நேற்று முன்தினம் துவங்கப்பட்டது. மத்திய அரசின் இத்திட்டத்திற்கு புதுச்சேரியில் 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சை பெற மத்திய அரசு திட்டம் கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தில், 1.50 லட்சம் ரூபாய் அளவிற்கு, ஒரு வாரம் மருத்துவமனையில் உள்நோயாளியாக இலவச சிகிச்சை பெறலாம். இத்திட்டம் புதுச்சேரியிலும் துவங்கப்பட்டுள்ளது.இத்திட்டம் நல்ல திட்டம். அதே நேரத்தில், விபத்தில் தலை, தண்டுவடத்தில் காயமடைந்தவர்களுக்கு கூடுதலாக செலவு செய்ய வேண்டி வரும்.விபத்தில் சிக்கியவர்கள் மேல்சிகிச்சைக்கு வெளியூர் சென்றால், அப்போது இந்த நிதி போதாது. கூடுதலாக செலவாகும். இது பொருளாதார ரீதியாக குடும்பங்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.எனவே, விபத்தில் தலை, முதுகுதண்டில் அடிபட்டு சிகிச்சைக்கு சென்றால் மத்திய அரசு திட்டத்தோடு, புதுச்சேரி அரசின் மாநில நிதி 1.50 லட்சம் சேர்த்து, 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும். விபத்தில் பாதிக்கப்படும் அனைவருக்கும் பாகுபாடின்றி இந்த நிதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.முதல்வரின் அறிவிப்பை, அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் மேஜையை தட்டி வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை