அமலோற்பவம் பள்ளியில் சதுரங்கம் குறித்து கலந்துரையாடல்
புதுச்சேரி : அமலோற்பவம் ஸ்கூல் ஆப் ஸ்போர்ட்சில் சதுரங்க விளையாட்டு பற்றிய ஆன்லைன் விளக்க நிகழ்ச்சி நடந்தது.இதில், அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி மற்றும் அமலோற்பவம் லுார்து அகாடமியில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகள், அவர்களது பெற்றோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக தேசிய மகளிர் சதுரங்க கிராண்ட் மாஸ்டர் ஆர்த்தி ராமசாமி பங்கேற்றார். சதுரங்க விளையாட்டின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் என்னும் தலைப்பில் விளக்கம் அளித்தார்.150க்கு மேற்பட்ட பெற்றோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியை பள்ளியின் முதல்வர் வரவேற்று துவக்கி வைத்தார். பெற்றோர்கள், சதுரங்க போட்டி பற்றிய சந்தேகங்களை எழுப்பி விளக்கம் பெற்றனர்.அதனைத் தொடர்ந்து, அமலோற்பவம் ஸ்கூல் ஆப் ஸ்போர்ட்ஸின் மேலாளர் பால்சூசைராஜ் சதுரங்க விளையாட்டு பயிற்சி முறைகள் குறித்து விளக்கமளித்தார். பலரும் ஆர்வமுடன் தங்கள் குழந்தைகளைப் பயிற்சியில் சேர்க்க விருப்பத்தைத் தெரிவித்தனர். நிகழ்ச்சியை பயிற்சியாளர் சுர்ஜித் ஒருங்கிணைத்தார். ஸ்கூல் ஆப் ஸ்போர்ட்சின் மேலாளர் ஜெரால்ட் நன்றி கூறினார்.