மேலும் செய்திகள்
தொழில்நுட்ப பல்கலை கழகத்தில் சுதந்திர தின விழா
18-Aug-2025
புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் ஒப்பந்தத்தின்படி சர்வதேச பரிமாற்ற மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்து. புதுச்சேரி பல்கலைக்கழகம், சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி ஒரு செமஸ்டர் வெளிநாட்டு, பல்கலைக் கழகத்தில் படித்து, பின், மாணவர்கள் பெற்ற கல்வி சார்ந்த அனுபவங்களை உள்நாட்டுப் பல்கலைக் கழகத்திற்கு மாற்றுவதாகும். இந்த பரிமாற்றத் திட்டம் உயர்கல்வியில் சர்வதேச நடைமுறைகள், அதிவேக பன்முக கலாசார அனுபவங்கள் மற்றும் சர்வதேச வாழ்க்கையை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. அதன்படி, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தங்கி படிக்கும் இத்தாலி, பிரான்ஸ், பாரிஸ் உள்ளிட்ட ஐரோப்பிய பல்கலைக் கழகங்களின் மாணவர்களை பிரெஞ்சு, ஆங்கிலம், அரசியல் மற்றும் சர்வதேச ஆய்வுகள் குறித்த படிப்புகளை படிப்பதற்கும், இரட்டைப் பட்டப்படிப்பு திட்டத்தின் மூன்றாம் ஆண்டு - எம்.ஏ., (சீல்) படிப்பை படிப்பதற்கு புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் தங்கி படித்தனர். இங்கு தங்கி படிக்கும் சர்வதேச பரிமாற்ற மாணவர்களை வரவேற்று, அவர்களுடன் கலந்துரையாடியபோது துணைவேந்தர் பேராசிரியர் பிரகாஷ் பாபு பேசுகையில், 'இந்தியா முழுதிலும் இருந்து இங்கு வந்து படிக்கும் மாணவர்களின் பன்முகதன்மை எவ்வாறு உள்ளது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். மேலும், இங்கு படிப்பை முடித்து செல்லும் நீங்கள், நாளை முன்னாள் மாணவர்களாக எப்போது வேண்டுமானாலும் வரலாம்' என்றார். மேலும் புதிதாக வந்துள்ள பரிமாற்ற மாணவர்கள் புதுச்சேரி பல்கலைக்கழக ஆசிரியர்களிடமிருந்து கற்றுக்கொள்வதைத் தவிர, இந்திய கலாசாரத்தின் பல்வேறு அம்சங்களை அறியவும் அவர்கள் விருப்பம் தெரிவித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராசிரியர் விக்டர் ஆனந்த்குமார் செய்திருந்தார். சர்வதேச உறவுகள்- துணை டீன் பேராசிரியர் சாரதா நன்றி கூறினார்.
18-Aug-2025