உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பணி நீக்க ஊழியர்கள் வேலை கேட்டு மறியல்

பணி நீக்க ஊழியர்கள் வேலை கேட்டு மறியல்

புதுச்சேரி: பணி நீக்க ஊழியர்கள், மீண்டும் வேலை கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். பொதுப்பணித்துறையில் 2016ம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வவுச்சர் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள், மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தினர். அதனையேற்று, பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் என, முதல்வர் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவித்தார். அந்த அறிவிப்பை செயல்படுத்த வலியுறுத்தி, பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் நேற்று கவர்னர் மாளிகையை முற்றுகையிட அண்ணா சிலையில் இருந்து ஊர்வலமாக சென்றனர். அவர்களை ராஜா தியேட்டர் அருகே பெரியக்கடை போலீசார் தடுத்து நிறுத்தியதில் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டக்குழுவினர், கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை