இரு தரப்பினர் இடையே தகராறு
காரைக்கால்: காரைக்காலில் முன் விரோதத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காரைக்கால் திருநள்ளாறு பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது முன் விரோத காரணமாக திருநள்ளார் அம்பேத்கார் நகர் பகுதியில் இரு தரப்பினர் சாலையில் தகராறில் ஈடுபட்டனர். பின் இருவரையும் போலீசார் சமாதானப்படுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். இதில் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த சுரேந்தர் மற்றும் ஆறுமுகம், வேம்பு ராஜ், சாந்தி ஆகிய நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.