உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொது இடத்தில் தகராறு: 5 பேர் கைது

பொது இடத்தில் தகராறு: 5 பேர் கைது

புதுச்சேரி: பொது இடத்தில் தகராறில் ஈடுப்பட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.லாஸ்பேட்டை மேஜர் சரவணன் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தன், 45. இவர், நேற்று முன்தினம் இரவு லாஸ்பேட்டை காமராஜர் மணிமண்டபம் பகுதியில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொது மக்களிடம் தகராறு செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த லாஸ்பேட்டை போலீசார் அவரை கைது செய்தனர். இதேபோல் மேட்டுப்பாளையம் பகுதியில் தகராறு செய்த முத்திரப்பாளையம் பாலமுருகன், 41; ரெட்டியார்பாளையம் பகுதியில் ரகளையில் ஈடுப்பட்ட காட்டேரிக்குப்பம் இருசப்பன், 48, முத்தியால்பேட்டை பகுதியில் தகராறு செய்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த உஸ்மான் 21, சோலை நகர் ராமு, 31, ஆகியோரை அந்தந்த பகுதி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை