உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வட்ட அளவிலான போட்டி ஆலோசனை கூட்டம்

வட்ட அளவிலான போட்டி ஆலோசனை கூட்டம்

பாகூர்: புதுச்சேரி கல்வி துறையின் கீழ் இயங்கி வரும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை சார்பில் ஆண்டுதோறும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, 2025-26ம் கல்வியாண்டில், வட்டம் 3ல், விளையாட்டு போட்டி கள் நடத்துவதற்கான வாய்ப்பும், சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர் நிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளது.அது தொடர்பான, ஆலோசனை கூட்டம் பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரியர் பழனிசாமி தலைமை தாங்கினார்.விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை இணை இயக்குனர் வைத்தியநாதன், ஓய்வுபெற்ற உடற் கல்வி விரிவுரையாளர் ஆறுமுகம், உடற்கல்வி விரைவுரையாளர்கள் பழனி, குருநாதன், முரளிதரன், நாராயணசாமி ஆகியோர் விளையாட்டு போட்டிகளை சிறப்பாக நடத்துவது குறித்து பேசினர்.கூட்டத்தில், வட்ட அளவில் நடைபெறும் போட்டியின் மூலம் மாநில அளவிலான போட்டிகளுக்கு வீரர்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.உடற்கல்வி விரிவுரையாளர் தணிகைக்குமரன் ஏற்புரையாற்றினார். உடற்கல்வி ஆசிரியர் கமலக்கண்ணன் தொகுப்புரையாற்றினார். அரியாங்குப்பம், பாகூர், நெட்டப்பாக்கம் கொம்யூன் பகுதி பள்ளிகளை சேர்ந்த உடற்கல்வி விரைவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !