மேலும் செய்திகள்
கவர்னர், முதல்வர் தீபாவளி வாழ்த்து
31-Oct-2024
வில்லியனுார் ; திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவில் வளாகத்தில் இந்து சமய சனாதன வேத ஆகம திருமுறை திவ்யபிரபந்த வளர்ச்சிப் பெருவிழா நடந்தது. கவர்னர் கைலாஷ்நாதன் தலைமை தாங்கினார். சபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனீ ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.புதுச்சேரி மாநில ஆலய அர்ச்சகர் அந்தணர்கள் பாதுகாப்பு கழக தலைவர் சரவணா சிவாச்சார்யார் வரவேற்றார்.நிகழ்ச்சியில் சிறந்த சைவாகம தொண்டிற்கான விருதுகளைதிருக்கண்ணங்குடி ஞானாம்பிகை வேத சிவகாம பாடசாலை நிறுவனர் மற்றம் முதல்வர் பாலசுப்ரமணிய சிவாச்சார்யார், காரைக்கால் ஸ்ரீமத் ஸ்ரீகண்ட சிவாச்சாரிய வித்யா பீடநிறுவனர் சர்வேஸ்வர சிவாச்சார்யார், சைவ ஆராய்ச்சி மைய தலைவர் கணேசன் ஆகியோருக்கு கவர்னர் வழங்கினார். மேலும், சிறந்த ஆன்மிக பணிக்கான விருதுகளை திருக்காமேஸ்வர் கோவில் திருவாசக குழு தலைவர் கோமதியம்மாள், நம்பெருமான் மாணிக்கவாசர் சிவனடியார் திருக்கூட்ட அமைப்பு தலைவர் கலியபெருமாள் ஆகியோருக்கும் வழங்கினார்.நிகழ்ச்சியில் மயிலம் பொம்மபுர ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள், பிள்ளையார்பட்டி சிவநெறிக்கழக முதல்வர் பிச்சைசிவாசார்யார், திருப்பரங்குன்றம் ஸ்ரீஸ்கந்தகுரு வித்யாபீட முதல்வர் ராஜா பட்டர், துாத்துக்குடி ஆலாலசுந்தரவேத சிவகாம வித்யாலய முதல்வர் செல்வம் பட்டர் உட்பட பலர் பங்கேற்றனர். புதுச்சேரி ஆலய அர்ச்சக அந்தணர்கள் பாதுகாப்பு கழக செயலாளர் ராகவேந்திரசிவம் நன்றி கூறினார்.
31-Oct-2024