உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தீபாவளி தொகுப்பு தாமதம்; அரசு அலுவலகம் முற்றுகை

தீபாவளி தொகுப்பு தாமதம்; அரசு அலுவலகம் முற்றுகை

புதுச்சேரி; புதுச்சேரியில் மானிய விலை மளிகை பொருட்கள் வழங்கப்படாததால் பொதுமக்கள் 'கான்பெட்' அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.தீபாவளி பண்டிகையையொட்டி, அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும், 10 கிலோ இலவச அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை வழங்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். இத்திட்டத்தை, மேட்டுப்பாளையத்தில், கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். ஆனால் பல இடங்களில் நேற்று வரை இலவச அரிசி, சர்க்கரை வழங்கப்படவில்லை. இதற்கிடையே, தீபாவளியையொட்டி, ரூ. ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் தொகுப்பு, மானிய விலையில், ரூ.500,க்கு வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். மேலும், 30 ஆயிரம் பேருக்கு மட்டுமே, இந்த பொருட்கள் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்ததால், பெண்கள் ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால் நேற்று முன்தினம் வரை, இந்த பொருட்கள் வழங்குவதற்கான அறிகுறி எதுவும் இல்லை.இந்நிலையில் நேற்றும் மானிய விலை மளிகை பொருட்கள் வழங்கப்படாததால், நகரம் மற்றும் கிராமப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தட்டாஞ்சாவடியில் உள்ள கான்பெட் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை