உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஏ.எப்.டி., ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கல்

ஏ.எப்.டி., ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கல்

புதுச்சேரி: நலிவடைந்து இருக்கும் ஏ.எப்.டி., தொழிலாளர்களுக்கு சமூக சேவகர் சார்லஸ் மார்டின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதன்படி, தீபாவளியை முன்னிட்டு, ஏ.எப்.டி., பஞ்சாலை ஊழியர்களுக்கு ஜே.சி.எம்., மக்கள் மன்றம் சார்பில், சமூக சேவகர் சார்லஸ் மார்டின் அறிவுறுத்தலின்படி தலைவர் ரீகன் ஜான்குமார், 5 கிலோ அரிசி, 3 கிலோ சர்க்கரை, பட்டாசு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினார். தலைவர் ரீகன் ஜான்குமார் கூறுகையில், 'தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 350 ஊழியர்களுக்கு சார்லஸ் மார்ட்டின் அறிவுறுத்தலின்படி தீபாவளி பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஏ .எப்.டி., பஞ்சாலையை எடுத்து நடத்தவும், அதில் இருக்கும் கடன் தொகை செலுத்தி தனியார் பங்களிப்புடன் நடத்துவது தொடர்பான திட்ட அறிக்கை சார்லஸ் மார்ட்டின் மூலம் அரசுக்கு அளிக்கப்பட்டு உள்ளது. விரைவில் நல்ல பதில் வரும் என எதிர்பார்க்கப்பதாக தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ