உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வில்லியனுாரில் தீபாவளி அங்காடி திறப்பு

வில்லியனுாரில் தீபாவளி அங்காடி திறப்பு

வில்லியனுார்: வில்லியனுாரில் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்கள் விற்பனை அங்காடியை ரவிக்குமார் எம்.எல்.ஏ., திறந்துவைத்தார். புதுச்சேரி அரசு ஊரக வளர்ச்சி முகமை மற்றும் வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுவினரின் உற்பத்தி பொருட்களை நுகர்வோர்களிடம் நேரடியாக விற்பனை செய்யும் வகையில் வில்லியனுார் வாணியர் திருமண நிலையத்தில் தீபாவளி அங்காடி மற்றும் கிராம சந்தை திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு வட்டார வளர்ச்சி அதிகாரி சிவசங்கரன் தலைமை தாங்கினார். இணை வட்டார வளர்ச்சி அதிகாரி கலைமதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ரவிக்குமார் எம்.எல்.ஏ., பங்கேற்று தீபாவளி அங்காடியைதிறந்துவைத்து பார்வையிட்டார். வரும் 6ம் தேதி மாலை வரை செயல்படும் இந்த அங்காடியில் மளிகை பொருட்கள், துணிகள், தேன், அழகுசாதனப் பொருட்கள், பலகார மாவு வகைகள், மரசாமான்கள், வீட்டு உபயோக பொருட்கள், நாட்டுகோழி முட்டை, ஒயர் கூடை உள்ளிட்ட கைவினைப் பொருட்கள், மூலிகை மற்றும் மலர் செடிகள் உள்ளிட்ட 120–க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான பொருட்கள் விற்பனைக்கு வைத்துள்ளனர். திட்ட இணைப்பு அதிகாரிசாந்தமூர்த்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ