உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை

தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை

புதுச்சேரி : ராஜ்பவன் தொகுதி தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அரவிந்தர் வீதி கட்சி அலுவலகத்தில் நடந்தது.தொகுதி செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். தொகுதி அவைத் தலைவர் புகழ்மணி முன்னிலை வகித்தார். மாநில அவைத்தலைவர் எஸ்.பி., சிவக்குமார் தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்.கூட்டத்தில் தொகுதி, கிளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, மறைந்த முரசொலி செல்வத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.இதில், ஏ.எப்.டி., பாரதி மற்றும் சுதேசி பஞ்சாலைகளை உடனடியாக திறந்திட நடவடிக்கை எடுக்க கவர்னர், முதல்வரை வலியுறுத்துவது. ராஜ்பவன் தொகுதியில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளை அங்கு வசித்த மக்களுக்கும், வீடற்ற ஏழை மக்களுக்கும் அரசு வழங்க வேண்டும். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் தீவிரமாக ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநில தொண்டர் அணி அமைப்பாளர் வீரய்யன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ