மேலும் செய்திகள்
தி.மு.க., வேட்பாளர் ரங்கன் தீவிர ஓட்டு சேகரிப்பு
26-Mar-2026
புதுச்சேரி: மங்கலம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் ரங்கனுக்கு, பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மங்கலம் தொகுதியில் இண்டி கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் சிவராந்தகம் ரங்கன், கீழூர், சிவராந்தகம், மேல்சாத்தமங்கலம் கிராமங்களில் ஓட்டு சேகரித்தார். அப்போது, அவர், கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் வீடு, வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அவரிடம், குடிநீர், சாலை, கழிவுநீர் வாய்க்கால், தடையில்லா மின்சாரம், வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி கொடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். தி.மு.க., வேட்பாளர் ரங்கன் மற்றும் அவரது மகள் சத்யா ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்தும், மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால், தி.மு.க., வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாகம் அடைந்து தீவிர தேர்தல் பணியில் ஈடுபட தொடங்கினர். ஓட்டு சேகரப்பின்போது, வேட்பாளரின் மகள் சத்யா, தி.மு.க., தொகுதி பொறுப்பாளர் முருகதாஸ், அவைத் தலைவர் புஷ்பா, நிர்வாகிகள் ஸ்ரீஹரி, எம்.எஸ். முரளி, அய்யனார், கல்யாண், கீழ்சாத்தமங்கலம் கிளைச் செயலாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
26-Mar-2026