உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் பிறந்த நாள்

 தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் பிறந்த நாள்

அரியாங்குப்பம்: மணவெளி தொகுதியை சேர்ந்த, மாநில தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் சன் சண்முகம் தனது பிறந்த நாளை, ஆதரவாளர்களுடன் கொண்டாடினார். பிறந்த நாளையொட்டி, நேற்று முன்தினம், மணவெளி மாரியம்மன் கோவில், பூரணாங்குப்பம் அங்காளம்மன் கோவில், நாணமேடு மாரியம்மன் கோவிலில், நடந்த அபிேஷக நிகழ்ச்சியில், பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, தவளக்குப்பம் சந்திப்பில், எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில், கேக் வெட்டி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். தொடர்ந்து, தவளக்குப்பத்தில் இருந்து அபிேஷகப்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலை மற்றும் டி.என்.பாளையம் அம்பேக்தர் சிலைக்கு, ஆதரவாளர்களுடன் சென்று, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வீட்டில் நடந்த நிகழ்ச்சியில், உறவினர்களுடன் கேக் வெட்டி பிறந்த நாளை, கொண்டாடிய, அவருக்கு, செந்தில்குமார் எம்.எல்.ஏ., தி.மு.க, மணவெளி தொகுதி செயலாளர் ராஜாராமன், மாநில விளையாட்டு அணி அமைப்பாளர் ரவிச்சந்திரன், மணவெளி தொகுதி அவைத்தலைவர் முருகன், பொருளாளர் செல்லப்பன், ஆதிதிராவிடர் மேம்பாட்டு துணை அமைப்பாளர் சக்திவேல், மாநில பிரதிநிதி ராஜாமணி உட்பட கட்சி நிர்வாகிகள், நண்பர்கள் ஆகியோர் கலந்து கொண்டு, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை