உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஷாமியானா, நாற்காலி வழங்கும் நிகழ்ச்சி முத்தியால்பேட்டையில் தி.மு.க., துவக்கி வைப்பு

ஷாமியானா, நாற்காலி வழங்கும் நிகழ்ச்சி முத்தியால்பேட்டையில் தி.மு.க., துவக்கி வைப்பு

புதுச்சேரி : முத்தியால்பேட்டை தொகுதியில் போன் செய்தால் வீடு தேடி ஷாமியானா, நாற்காலிகள் வழங்கும் சேவை தொடக்க விழா தி.மு.க., அலுவலகத்தில் நடந்தது. விழாவிற்கு, முன்னாள் தி.மு.க., எம்.எல்.ஏ., நந்தா சரவணன் 'தலைமை தாங்கினார். புதுச்சேரி மாநில தி.மு.க., அமைப்பாளர் சிவா திட்டத்தை தொடங்கி வைத்தார். தி.மு.க., அவைத் தலைவர் சிவக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் மற்றும் தி.மு.க., தொகுதி, மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முத்தியால்பேட்டை தொகுதி மக்கள் 8537 929292, 8537 939393 ஆகிய எண்களை 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம். தொகுதி மக்களின் வீடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு தேவையான ஷாமியானா, நாற்காலிகள், டேபிள், ஐஸ் பாக்ஸ் இலவசமாக அமைத்து தரப்படும் என, முன்னாள் எம்.எல்.ஏ., நந்தா சரவணன் தெரிவித்தார். நிகழ்ச்சியில் முன்னாள் சபாநாயகர் பழனிராஜா, தொகுதி செயலாளர் சவுரி ராஜன், அவைத் தலைவர் எழிலன், துணை செயலாளர் ரவி, பிரதிநிதி தனசேகர், துணை செயலாளர் கலைவாணி, செயற்குழு உறுப்பினர்கள் சண்முகம், வெங்கடேசன், மாநில நெசவாளர் அணி செயலாளர் செந்தில் முருகன், துணை செயலாளர்கள் சந்துரு, நவீன், தி.மு.க., மக்கள் சேவை மையம் மதன் பாபு, பூபதி, பாபு, பாஸ்கர், பிரகாஷ், பாஸ்கர், அல்போன்ஸ், ஆறுமுகம், சண்முகம், முருகன், விமல் ராஜ், தேசப்பன், உதயகுமார், சங்கரலிங்கம், விநாயகமூர்த்தி, ஆனந்த், கோட்டரஸ் சரவணன், சரவணன், ஆரோக்கிய ராஜ், திலீப், விக்னேஷ், ஜீவா, மகளிர் அணி தனம், லதா, ராணி, சுந்தரி, அமலோற்பவ மேரி, விமலா லட்சுமி, அன்பரசி செல்வி, ரீட்டா, ராஜேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை