மேலும் செய்திகள்
கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
9 minutes ago
ரகளை செய்த வாலிபர் கைது
15 minutes ago
புதுச்சேரி: உழவர்கரை தொகுதி தி.மு.க., நிர்வாகிகள், ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் ரெட்டியார்பாளையத்தில் நடந்தது. தொகுதி செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் விஜயரங்கம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் அருட்செல்வி முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பாளர் சிவா பேசுகையில், வரும் 26ம் தேதி உழவர்கரை தொகுதியில் நடக்கும் உறுப்பினர் சேர்க்கை முகாமில், ஒருங்கிணைப்பாளர் ஜெகத்ரட்சகனுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து, அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். எஸ்.ஐ.ஆர்., திருத்தப்பணியில் முகவர்கள் கவனமாக இருந்து பணியாற்றி, தகுதி வாய்ந்த வாக்காளர்கள் நீக்கப்படாமல் இருக்க விழிப்புடன் செயலாற்ற வேண்டும்' என்றார். தொண்டரணி துணை அமைப்பாளர்கள் சந்தோஷ், சிவராமன், வழக்கறிஞரணி துணைத் தலைவர் தாமோதரன், வெற்றிச்செல்வன், நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சுப்ரமணி, மகளிரணி துணை அமைப்பாளர் புஷ்பமாலா, தொகுதி இளைஞரணி ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
9 minutes ago
15 minutes ago