உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முத்தியால்பேட்டையில் மின்தடை சரி செய்ய தி.மு.க., மனு

முத்தியால்பேட்டையில் மின்தடை சரி செய்ய தி.மு.க., மனு

புதுச்சேரி: முத்தியால்பேட்டை தொகுதி தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., நந்தா சரவணன் தொகுதி மக்களுடன் சென்று மின் துறை தலைமை பொறியாளரை சந்தித்து மனு அளித்தார். மனுவில், கூறியிருப்பதாவது: முத்தியால்பேட்டை தொகுதியில், மின்துறை சார்பில், 35 ஆண்டுகளுக்கு முன்,புதைவட கேபிள் பதிக்கப்பட்டது. இவை தற்போது பழுதாகி மின் கேபிள்கள் எரிந்து மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக, சுப்ரமணிய கோவில் தெரு, லோகமுத்து மாரியம்மன் கோவில் தெரு, அங்காளம்மன் கோவில் தெரு, அங்காளம்மன் 3, 4, 5 குறுக்கு தெரு, ஆகிய வீதிகளில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த பகுதியில் மின் பகிர்மான அமைப்பினை புதிதாக அமைக்க வேண்டும். சோலை நகர் தெற்கு பகுதி, செங்கோணி அம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மக்களுக்கான மின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், தனி, மின்மாற்றி அமைக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ