உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எஸ்.ஐ.ஆர்., சீர்திருத்தம் குறித்து தி.மு.க., விளக்க கையேடு வழங்கல்

எஸ்.ஐ.ஆர்., சீர்திருத்தம் குறித்து தி.மு.க., விளக்க கையேடு வழங்கல்

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி மக்களுக்கு எஸ்.ஐ.ஆர்., சீர்திருத்தம் குறித்த விளக்க கையேட்டை தொகுதி தி.மு.க., பொறுப்பாளர் டாக்டர் நித்தீஷ் வழங்கினார். தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில் இந்திய தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு வாக்காளர் சீராய்வு பணியை கடந்த 4ம் தேதி முதல் மேற்கொண்டுள்ளது. புதுச்சேரி மாநில தி.மு.க., அமைப்பாளர் சிவா வழிகாட்டுதலின் பேரில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து ஓட்டுச் சாவடிகளுக்கும் தி.மு.க., சார்பில் பாக முகவர்கள் நியமிக்கப்பட்டு சிறப்பு வாக்காளர் திருத்தப் பணியை உடனிருந்து கண்காணித்து வருவதோடு, வாக்காளர்களுக்கு ஏற்படுகின்ற சந்தேகங்களை போக்கி, ஓட்டு திருட்டு நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தட்டாஞ்சாவடி தொகுதியில் வாக்காளர் திருத்தப் பணியில் வாக்காளர்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கிய கடமைகள் எனும் தலைப்பில் வாக்காளர்களுக்கு தேவையான தகவல்கள் அடங்கிய கையேட்டை தட்டாஞ்சாவடி தொகுதி பொறுப்பாளரும், தி.மு.க., இளைஞர் அணி மாநில துணை அமைப்பாளர் நித்தீஷ் தலைமையில் தி.மு.க., பாக முகவர்கள் வீடு, வீடாக சென்று வழங்கி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை