உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டாக்டர் மாயம்: மனைவி புகார்

டாக்டர் மாயம்: மனைவி புகார்

புதுச்சேரி : புதுச்சேரி தருமாபுரி, திரவுபதி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சக்திதரன்,50; காலாப்பட்டு, சிறையில் டாக்டராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி ஆனந்தலட்சுமி மயிலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணி புரிந்து வருகிறார். சக்திதரன், அடிக்கடி சிவன் கோவில்களுக்கும், திருவண்ணாமலை கிரிவலத்திற்கும் சென்று வருவது வழக்கம். கடந்த 22ம் தேதி, வெளியில் சென்று வருவதாக, தனது மனைவியிடம் கூறிவிட்டு, வீட்டிலிருந்து பைக்கில் சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ