உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வெங்கடேஸ்வரா கல்லுாரியில் மருத்துவர்கள் மாநாடு

 வெங்கடேஸ்வரா கல்லுாரியில் மருத்துவர்கள் மாநாடு

வில்லியனுார்: அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரியில் 'பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் நுண்ணுயிரிகள், ஒரு கண்ணுக்கு தெரியாத அச்சுறுத்தல்' என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு நடந்தது. வெங்கடேஸ்வரா கல்விக் குழும சேர்மன் ராமச்சந்திரன் வழிகாட்டுதலின் படி நடந்த மாநாட்டிற்கு வெங்கடேஸ்வரா கல்வி குழும தலைமை செயல்பாட்டு அதிகாரி வித்யா தலைமை தாங்கினார். மருத்துவக் கல்லுாரி இயக்குநர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். கல்லுாரி மேற்பார்வையாளர் ஜோசப்ராஜ் வரவேற்றார். மாநாட்டில், டாக்டர்கள் ஆசாத், ரோஹித்குமார், கார்த்திகேயன் மகாலிங்கம் மற்றும் ேஹமலதா ஆகியோர் பங்கேற்று நுண்ணுயிர் தொற்றுகளால் சமூக சுகாதாரத்திற்கு உருவாகும் மறைமுக அச்சுறுத்தல்களை உணர்த்தியதோடு, மருத்துவத் துறையில் உள்ள மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு புதிய அறிவு வழங்கினர். மனித உடலின் நல்ல மற்றும் கெட்ட ஒட்டுண்ணிகள், சமூகத்தால் பெறப்படும் நிமோனியா, கண்ணில் காணப்படும் நுண்ணுயிர்கள், நீர்வாழ் நுண்ணுயிர்களால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் கருத்துரை வழங்கினர். அகில இந்திய அளவில் பல மருத்துவ கல்வி நிறுவனங்களை சேர்ந்த மருத்துவ பேராசிரியர்கள், இணை மற்றும் உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மாநாடு ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் டாக்டர்கள் லதா, வினோத், ரேவதி ஆகியோர் செய்த னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை