மேலும் செய்திகள்
இறந்து கரை ஒதுங்கிய ராட்சத கடல் பசு
16-Apr-2026
புதுச்சேரி: பாண்டி மெரினாவில் இறந்த நிலையில் டால்பின் கரை ஒதுங்கியது. துப்புராயப்பேட்டை, பாண்டி மெரினா கடற்கரை பகுதியில் நேற்று மாலை 5:30 மணியளவில், இறந்த நிலையில் டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது. டால்பின் 2.5 அடி நீளம், 7 கிலோ எடையும் இருந்தது. இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பினை பொதுமக்கள் பார்க்க திரண்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த உயிர்காக்கும் ஊழியர் முத்துக்குமார், 32; டால்பின் கரை ஒதுங்கியது குறித்து வனத்துறைக்கு தகவல் அளித்தார். தகவலின்பேரில் வனத்துறை ஊழியர்கள் அங்கு சென்று இறந்த நிலையில் இருந்த டால்பினை எடுத்துச்சென்றனர்.
16-Apr-2026