உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  எம்.டி., எம்.எஸ்., படிப்புகளுக்கு வரைவு தரவரிசை பட்டியல்

 எம்.டி., எம்.எஸ்., படிப்புகளுக்கு வரைவு தரவரிசை பட்டியல்

புதுச்சேரி: முதுநிலை படிப்புகளுக்கு வரைவு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்டாக் எம்.டி., எம்.எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு கடந்த 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை சென்டாக் விண்ணப்பம் வரவேற்கப்பட்டன. இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்த சென்டாக் வரைவு தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் 1,285 பேர் விண்ணப்பித்துள்ளனர். அரசு ஒதுக்கீட்டிற்கு மட்டும் 413 பேர் விண்ணப்பித்தனர். இதில் 324 விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்தவையாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. கட் ஆப் மதிப்பெண் குறைவாக இருந்த 89 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதேபோல் நிர்வாக இடங்களுக்கு 952 பேர் விண்ணப்பித்து இருந்ததில் 924 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 28 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மாணவர்கள் தங்களுடைய படிப்பு முன்னுரிமையை வரும் 2ம் தேதிக்குள் கொடுக்க வேண்டும் என, சென்டாக் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை