உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வடிகால் அமைக்கும் பணி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு 

வடிகால் அமைக்கும் பணி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு 

புதுச்சேரி; நடேசன் நகர் புறவழிச்சாலை, ஆர்.டி.ஒ., பாலத்தின் கீழ் தெற்குப் பக்கம் வடிகால் அமைக்கும் பணியினை சம்பத் எம்.எல்.ஏ., பூஜை செய்து துவக்கி வைத்தார்.புதுச்சேரி, நடேசன் நகர் புறவழிச்சாலை, ஆர்.டி.ஒ., பாலத்தின் கீழ், விழுப்புரம் செல்லும் சாலையின் தெற்குப் பக்கம் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை கோட்டம் மூலம் 41 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வடிகால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.சம்பத் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். பொதுப் பணித்துறை தலைமைப் பொறியாளர் வீரசெல்வம், தேசிய நெடுஞ்சாலைக் கோட்டம் செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவிப் பொறியாளர் ஜெயராஜ், இளநிலை பொறியாளர் கோபிநாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை