உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேங்காய்த்திட்டில் நாளை குடிநீர் தடை

தேங்காய்த்திட்டில் நாளை குடிநீர் தடை

புதுச்சேரி,: தேங்காய்த்திட்டு பகுதியில் நாளை குடிநீர் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பொதுப்பணித்துறை பொதுசுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தேங்காய்த்திட்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சுத்தம் செய்யப்பட உள்ளது. இதனால், நாளை (24ம் தேதி ) பகல் 12:00 மணி முதல் 2:00 மணி வரை தேங்காய்த்திட்டு, புதுநகர், தனபால் நகர், பாவேந்தர் நகர், அய்யனார் கோவில் தெரு, மேட்டுத்தெரு, வடக்குபேட், புருஷோத்தம நாயக்கர் வீதி, மீன்பிடி துறைமுக சாலை, காளியம்மன் நகர், வெற்றி விநாயகர் நகர், சாவித்திரி அம்மாள் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !