உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கழிவுநீர் வாய்க்காலில் குடிநீர் குழாய்

கழிவுநீர் வாய்க்காலில் குடிநீர் குழாய்

பொதுப்பணித்துறை சார்பில், கழிவுநீர் வாய்க்கால் வழியாக செல்லும் குடிநீர் குழாய்களை மாற்றியமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. புதுச்சேரி நகரின் முக்கிய பகுதிகளில் குடிநீர் குழாய்கள், கழிவுநீர் வாய்க்கால் மற்றும் பாதாள சாக்கடை அருகே அமைக்கப் பட்டுள்ளன. இதில், ஜெயமூர்த்தி ராஜா நகர், காராமணிக்குப்பம், முதலியார்பேட்டை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் துருப்பிடித்து உடைந்து காணப்படுவதால் கழிவுநீர், குடிநீரில் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், காராமணிக்குப்பம் ஜீவானந்தம் பள்ளி அருகே, துருபிடித்துள்ள குடிநீர் குழாயை மாற்றும் பணியில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். அங்கு பொருத்தப்பட்டிருந்த இரும்பு பைப், புதிதாக பி.வி.சி., குடிநீர் குழாயாக மாற்றியமைக்கப்பட்டது. இதேபோல், முதலியார்பேட்டை தொகுதியில் பல்வேறு பகுதிகளிலும், பழுதடைந்துள்ள குடிநீர் குழாய்கள் மாற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. முதலியார்பேட்டை தொகுதியில் பல இடங்களில் கழிவுநீர் வாய்க்கால் அருகே செல்லும் குடிநீர் குழாய் துருபிடித்துள்ளதால் அவற்றை விரைந்து மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை