மேலும் செய்திகள்
சி.சி.டி.வி., கேமரா இயக்கி வைப்பு
31-May-2025
அங்கன்வாடி மையம் திறப்பு
07-Jun-2025
திருபுவனை : திருவாண்டார்கோயில் கிராமத்தில் புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறையின் மூலம் ரூ.15.52 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட புதிய ஆழ்குழாய் கிணற்றின் குடிநீர் சேவையை அங்காளன் எம்.எல்.ஏ., நேற்று மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.திருபுவனை தொகுதிக்குட்பட்ட திருவண்டார்கோவில் கிராமத்தில் புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை மூலம் ரூ.15.52 லட்சம் செலவில் புதிய ஆழ் குழாய் கிணறுமற்றும் குடிநீர் உந்து குழாய் அமைத்தல் முதலிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இந்த குடிநீர் திட்டத்திற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் துவக்க விழா நேற்று நடந்தது. விழாவிற்கு அங்காளன் எம்.எல்.ஏ., தலைமையேற்று குடிநீர் சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.பொதுப்பணித்துறை கிராம குடிநீர்த்திட்ட உதவிப்பொறியாளர் பீனாராணி, இளநிலைப் பொறியாளர் சுதர்சனம், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் உதவிப்பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலைப் பொறியாளர் பாஸ்கர் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள், கிராம மக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.இந்தக் குடிநீர்த்திட்டத்தின் மூலம் திருவண்டார்கோயில் கிராமத்திலுள்ள சுமார் 6 ஆயிரத்து 500 பேர் பயன்பெறுவர்.
31-May-2025
07-Jun-2025