உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மது போதையில் ஆம்னி பஸ் இயக்கிய டிரைவருக்கு அபராதம் 

 மது போதையில் ஆம்னி பஸ் இயக்கிய டிரைவருக்கு அபராதம் 

புதுச்சேரி: மது போதையில் ஆம்னி பஸ் இயக்கிய டிரைவருக்கு, போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். மறைமலையடிகள் சாலையில் கிழக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி தலைமையில், போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரி புதிய பஸ் நிலையம் அருகில் இருந்து கோயம்புத்துார் செல்லும் தனியார் ஆம்னி பஸ் வந்தது. போலீசார் பஸ்சை நிறுத்தி சோதன செய்தனர். அப்போது, ஆம்னி பஸ்ஸை இயக்கிய ஓட்டுநர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். பின் மாற்று டிரைவர் மூலம் தனியார் ஆம்னி பஸ் கோயம்புத்துாருக்கு இயக்கப்பட்டது. இதேபோல், அவ்வழியாக மது போதையில் பைக் ஓட்டி வந்த 5 பேருக்கு, போலீசார் தலா 10 ஆயிரம் அபராதம் விதித்து அவர்களை எச்சரித்து அனுப்பினர். தொடர்ந்து, மறைமலையடிகள் சாலையில் போக்குவரத்திற்கு இடையூராக சாலையில் நிறுத்தியிருந்த 3 ஆம்னி பஸ்களுக்கு தலா 10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை