உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  3ம் தேதி ட்ரோன்கள் பறக்க தடை: கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவு

 3ம் தேதி ட்ரோன்கள் பறக்க தடை: கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சி பகுதியில் வரும் 3ம் தேதி 'ட்ரோன்கள்' பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; பிரதமர் மோடி வரும் 3ம் தேதி புதுச்சேரி வருகை தர உள்ளார். அதனையொட்டி, மாவட்ட நிர்வாகம் சார்பில், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பிரதமர் வருகை காலத்தில் புதுச்சேரியை 'ட்ரோன்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட மண்டலம்' என, அறிவிக்க காவல் கண்காணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ட்ரோன் கேமராக்கள் மற்றும் ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும், ட்ரோன்கள், பலுான்கள் போன்றவற்றின் மூலம் எந்த விதமான வான்வழி புகைப்படம் அல்லது வீடியோ பதிவு மேற்கொள்ளவும் தடை செய்யப்படுகிறது. பிரதமர் புதுச்சேரி வருகை தரும் நிலையில், பலத்த பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சி பகுதிகள் வரும் 3ம் தேதி 'ட்ரோன்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட மண்டலம்' என்று அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை