மேலும் செய்திகள்
பள்ளிச் செய்தி
24-Oct-2026
புதுச்சேரி: புதுச்சேரி மை பாரத் கேந்திரா சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் ஊர்வலம் நடந்தது. திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷன் எதிரே துவங்கிய ஊர்வலத்தில் தனியார் பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஊர்வலத்தில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள், உடல்நலம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஏற்பாடுகளை மாநில அலுவலகப் பணியாளர் சாரதி, ஸ்ரீதரன், தெய்வானை, தினேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
24-Oct-2026