உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  போதை இல்லா இந்தியா விழிப்புணர்வு பிரசாரம்

 போதை இல்லா இந்தியா விழிப்புணர்வு பிரசாரம்

புதுச்சேரி: லாஸ்பேட்டை, அரசு மகளிர் பொறியியல் கல்லுாரியில், சமூக நலத்துறை இயக்குனரகம் சார்பில் 'போதைப் பொருள் இல்லா இந்தியா' பிரசார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் தணிகாசலம் தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் பங்கேற்று, போதைப் பொருள் பயன்பாட்டால், தனிமனிதன் மற்றும் சமூகத்தில் ஏற்படுத்தக் கூடிய தீய விளைவுகள், சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியை ஓட்டி, மாணவிகளுக்கிடையே நடத்தப்பட்ட கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, மாணவிகள் அனைவரும் 'போதை இல்லா புதுச்சேரியை அமைத்திடு வோம்' என்ற உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர். ஏற்பாடுகளை இயற்பியல் பேராசிரியர் கார்த்திகேயன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி