உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

 போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

புதுச்சேரி: திருக்கனுார் சுப்ரமணிய பாரதி மேல்நிலைப் பள்ளியில் சமுதாய நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை சார்பில், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பள்ளி நிர்வாகி சம்பத் தலைமை தாங்கினார். துணை முதல்வர் சுசிலா சம்பத் முன்னிலை வகித்தார். திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். சப் இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கம் அளித்தார். பள்ளி வளாகத்தில் இருந்து துவங்கிய ஊர்வலம் காந்தி நகர், பிள்ளையார் கோவில் வீதி, வணிகர் வீதி, கடை வீதி வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. ஊர்வலத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்று,பொது மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. பள்ளி இயக்குநர் ஹரிஷ்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !