உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அதிக மது குடித்த டிரைவர் சாவு

 அதிக மது குடித்த டிரைவர் சாவு

புதுச்சேரி: அதிகமாக மது குடித்த கார் டிரைவர் பரிதாபமாக இறந்தார். வில்லியனுார் ஜி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மரியபிரகாஷ், 32; கார் ஓட்டுநர். குடிப்பழக்கம் உள்ள இவர், சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்து வந்தார். இதனால் அவருக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் கோபித்துக் கொண்டு மது அருந்திவிட்டு, வில்லியனுாரில் உள்ள மாதா கோவில் வளாகத்தில் படுத்திருந்தார். இந்நிலையில் இவர் உடல் அசைவின்றி கிடந்ததால் உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து, இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை