உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இ.கம்யூ., தட்டாஞ்சாவடி தொகுதி குழு மாநாடு

இ.கம்யூ., தட்டாஞ்சாவடி தொகுதி குழு மாநாடு

புதுச்சேரி : இந்திய கம்யூ., தட்டாஞ்சாவடி தொகுதிக் குழுவின் 5வது மாநாடு பாக்கமுடையான்பட்டு தனியார் ஓட்டலில் நடந்தது. மாநாட்டிற்கு மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் முருகன், மாநில குழு உறுப்பினர் செல்வம், தொகுதி குழு உறுப்பினர் பிரேமா தலைமை தாங்கினர். மூத்த தலைவர் ராமமூர்த்தி மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். மாநில செயலாளர் சலீம் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். தொகுதி செயலாளர் தென்னரசன் அறிக்கையை தாக்கல் செய்தார். மாநில துணை செயலாளர் சேதுசெல்வம், தினேஷ் பொன்னையா ஆகியோர் வாழ்த்தி பேசினர். தொகுதி பொருளாளர் தனஞ்செழியன் வரவு- செலவு அறிக்கை தாக்கல் செய்தார். மாநில குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாநாட்டில் தொகுதியில் வீடற்ற மக்களுக்கு இலவச மனைபட்டா, அடுக்குமாடி குடியிருப்பு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். சுத்தமான குடிநீர் வழங்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி