உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கல்வி உதவித்தொகை திட்ட விழிப்புணர்வு கூட்டம் 

கல்வி உதவித்தொகை திட்ட விழிப்புணர்வு கூட்டம் 

புதுச்சேரி : ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் மத்திய, மாநில அரசால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை திட்டத்தின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.இயக்குனர் இளங்கோவன் தலைமை தாங்கினார். நோடல் அதிகாரி பழனி, நலத்துறை அதிகாரி செந்தில், உதவியாளர் ஆனந்தராமன் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், என்.எஸ்.பி., மற்றும் முழு கல்விக் கட்டணம் வழங்கும் திட்டம் போன்ற மத்திய, மாநில அரசின் கல்வி உதவித்தொகை திட்டங்கள் அனைத்தும் புதுச்சேரியில் உள்ள அனைத்து எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களை சென்று சேர வேண்டும். அரசின் கல்வி உதவித்தொகை திட்டங்கள் அனைத்தும், கல்லுாரி மாணவர்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்க வேண்டும்.கல்விக்கட்டணக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட முழு கல்வி உதவிதொகையையும் கல்வி நிறுவனங்களுக்கு தருவது ஆதிதிராவிடர் நலத்துறையின் பொறுப்பு. எனவே, கல்வி கட்டணம் கேட்டு மாணவர்களை கல்வி நிறுவனங்கள் நிர்பந்திக்கக் கூடாது என, அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி