உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மொபட் திருடிய முதியவர் கைது

மொபட் திருடிய முதியவர் கைது

புதுச்சேரி:முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார், வேல்ராம்பட்டு ஏரிக்கரையில் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக மொபட்டில் வந்த முதியவரை போலீசார் நிறுத்தி, விசாரித்தனர். ஒதியம்பட்டு பகுதியை சேர்ந்த குமார் (எ) செல்வகுமார், 62, என்பதும், அவர், ஓட்டி வந்தது திருட்டு மொபட் என்பதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர். முதலியார்பேட்டை, முருங்கப்பாக்கம், இந்திரா நகர் ஆகிய பகுதியில் இருந்து திருடிய 3 மொபட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறை யில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !