உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறுமி பாலியல் பலாத்காரம்: முதியவருக்கு 20 ஆண்டு சிறை

சிறுமி பாலியல் பலாத்காரம்: முதியவருக்கு 20 ஆண்டு சிறை

புதுச்சேரி; புதுச்சேரியில் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 67 வயது முதியவருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது.புதுச்சேரி கண்டாக்டர் தோட்டம், பிரியதர்ஷினி நகரைச் சேர்ந்தவர் அந்தோணி, 67; மூன்று சக்கர சைக்கிள் ஓட்டும் தொழிலாளி. கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி, நகர பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு அந்தோணி சென்றார்.அந்த வீட்டின் அருகே விளையாடிய 10 வயது சிறுமியை வீட்டிற்குள் துாக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் போக்சோ வழக்கு பதிந்து அந்தோணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு விசாரணை, போக்சோ வழக்குகளை விசாரிக்கு விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜரானார்.வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அந்தோணிக்கு, 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 11 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சுமதி தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Indian
டிச 02, 2024 16:09

வளைகுடா நாடென்றால் இந்நேரம் மரண தண்டனை தான் ...இங்க தான் இப்பேற்பட்ட கொடூர குற்றத்திற்கு சிறை தண்டனை .


புதிய வீடியோ