உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரயில் மோதி மூதாட்டி பலி

ரயில் மோதி மூதாட்டி பலி

புதுச்சேரி: ரயில் மோதி, தண்டவாளத்தில் நடந்து சென்ற மூதாட்டி இறந்தார். காராமணிக்குப்பம், மாரியம்மன் நகரை சேர்ந்தவர் குமார் மனைவி தெய்வநாயகி, 59.இவர் நேற்று காலை 11:00 மணியளவில், ஜவகர் நகரில் உள்ள காஸ் சிலிண்டர் அலுவலகத்தில், பதிவு செய்ய சென்றார். பின், தனது உறவினர் வீட்டிற்கு செல்ல, அரும்பார்த்தபுரம், சாய்பாபா கோவில் அருகே, ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்த ரயில், அவர் மீது மோதியது. துாக்கியெறியப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !