உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாடியில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி சாவு

மாடியில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி சாவு

காரைக்கால்: காரைக்காலில் போதையில் மாடியில் இருந்து விழுந்து காயமடைந்த மூதாட்டி இறந்தார்.காரைக்கால், மதகடி தோமஸ் அருள் திடல் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மாமியார் சிந்தாமணி, 65; கூலி தொழிலாளி. இவர் மது அருந்துவது வழக்கம். சிந்தாமணி மற்றும் அவரது சகோதரி மாரியம்மாள். இருவரும் மொட்டை மாடியில் கடந்த 1ம் தேதி இரவு மது அருந்தினர்.மாரியம்மாள் இரவு மாடியில் இருந்து கீழே இறங்கி படுக்கைக்கு சென்றார். சிந்தாமணி மாடியிலேயே உறங்குவது வழக்கம். நள்ளிரவு மாடியில் இருந்து சிந்தாமணி கீழே இறங்கும் போது தடுமாறி கீழே விழுந்து தலையில் படுகாயமடைந்தார்.அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில், நிரவி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !