உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ஜ., தொகுதி கிளை தலைவர்கள் தேர்தல்

பா.ஜ., தொகுதி கிளை தலைவர்கள் தேர்தல்

திருக்கனுார் : பா.ஜ., அமைப்பு தேர்தலை முன்னிட்டு மண்ணாடிப்பட்டு தொகுதியில் கிளைத் தலைவர் தேர்தல் நடத்தி, நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.புதுச்சேரி, மாநில பா.ஜ., அமைப்பு தேர்தலை முன்னிட்டு, வில்லியனுார் மாவட்டம், மண்ணாடிப்பட்டு தொகுதியில் கிளை தலைவர்கள் தேர்தல் கே.ஆர்.பாளையம் சுதர்சன் மஹாலில் நடந்தது.மாவட்ட தேர்தல் அதிகாரி முன்னாள் எம்.எல்.ஏ., தங்க விக்ரமன் தலைமை தாங்கினார். தொகுதி தலைவர் வேதாச்சலம், வில்லியனுார் மாவட்ட தேர்தல் அதிகாரி அனிதா முன்னிலை வகித்தனர்.இதில், தொகுதி கிளை தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்ட தேர்தல் இணை அதிகாரி ஆனந்தன், தொகுதி தேர்தல் அதிகாரி விஜயலட்சுமி, வீரராகவன், கலியபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை