உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவர்களுக்கான மின்சாரம், பிளம்பிங் பயிற்சி

மாணவர்களுக்கான மின்சாரம், பிளம்பிங் பயிற்சி

புதுச்சேரி: முத்தரையர்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில், புத்தகப்பை இல்லா தினம் முன்னிட்டு, மின்சாரம் மற்றும் பிளம்பிங் வேலை செய்முறை பயிற்சி நேற்று நடந்தது.பள்ளி துணை முதல்வர் கோகிலாம்பாள் தலைமை தாங்கினார்.எலக்ட்ரிஷியன் மணி மற்றும் பிளம்பர் நாகராஜன் ஆகியோர் மாணவர்களுக்கு வீடுகளில் ஏற்படும் மின்சாரம் மற்றும் பிளம்பிங் பிரச்னைகளை பாதுகாப்பான முறையில் எப்படி சரி செய்வது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.மேலும், மாணவர்கள் மின்சார தொடரிணைப்பு, பக்க இணைப்பு மற்றும் சுவிட்ச்இணைப்பு எவ்வாறு தருவது, பிளம்பிங் பிவிசி பாதிப்புகளை எவ்வாறு இணைப்பது குறித்தும் விளக்கம் பெற்றனர்.ஏற்பாடுகளை பள்ளி பொறுப்பாசிரியை மீனாட்சி, இயற்பியல் விரிவுரையாளர் ஸ்ரீராம், ஆசிரியர்கள் இளமுருகன், ஆசிரியர் கதிரவன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி