மேலும் செய்திகள்
ஊனமுற்ற நபர் சாவு
06-Dec-2024
புதுச்சேரி : குளியலறையில் எலெக்ட்ரீஷியன் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.வில்லியனுார் அடுத்த வி.மணவெளி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடகிரிதாஸ், 42; எலெக்ட்ரீஷியன். இவரது மனைவி விமலா, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2 ஆண்டுகளாக பிரிந்து அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதனால் வெங்கடகிரிதாஸ் அவரது தங்கை கெஜலட்சுமி வீட்டில் தங்கி உள்ளார். நேற்று முன்தினம் காலை குளியலறைக்கு சென்ற வெங்கடகிரிதாஸ் மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
06-Dec-2024