உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆல்பா கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்

ஆல்பா கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்

புதுச்சேரி: புதுச்சேரி கன்னியக்கோவில் ஆல்பா பொறியியல் கல்லுாரியில், பி.டபிள்யூ., டிசைன் குருப் நிறுவனம் மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.முகாமில் நுாற்றுாக்கும் மேற்பட்ட பொறியியல் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, ஆல்பா குழுமத்தின் தாளாளர் பாஷிங்கம் தலைமை தாங்கி, முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி ஆணையினை வழங்கினார்.நிகழ்ச்சியில் கல்லுாரி இயக்குநர் தன தியாகு, கம்பெனி மனிதவள மேம்பாட்டு அதிகாரி லாவண்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி