உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி திட்டம் துவக்கம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி திட்டம் துவக்கம்

புதுச்சேரி : அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழி திறமையை மேம்படுத்துவதற்கான பயிற்சி திட்டத்தை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.அரசு பள்ளிகளில் பயிலும், 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களின், ஆங்கில மொழி திறமையை மேம்படுத்துவதை, 'திஷா பவுண்டேஷன்' என்ற தனியார் அமைப்பின் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டது.இத்திட்டம், ரூ.97 லட்சம் செலவில், இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியின் நிதி பங்களிப்பின் மூலம், செயல்படுத்தப்படுகிறது. இதன் துவக்க விழாகடந்த 25ம் தேதிசட்டசபையில் முதல்வர் அலுவலகத்தில் நடந்தது.நிகழ்ச்சியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். இதில், சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச் சிவாயம் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், கலெக்டர் குலோத்துங்கன், பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் பிரியதர்ஷினி, திஷா அமைப்பின் மேலாண் பொறுப்பு ஆட்சியர் கோமதி, திட்டத்தலைவர் தாரா ஸ்ரீதர், இ.எல்.எப் இயக்குனர் சந்திரா விஸ்வநாதன், ஐ.டி.பி.ஐ., வங்கி துணை பொதுமேலாளர் நரேந்திர நாத் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இத்திட்டத்தின் மூலம் புதுச்சேரியில் உள்ள, 205 அரசு பள்ளிகளில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும், 17 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை