உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  போகியின் போது பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தல்

 போகியின் போது பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தல்

புதுச்சேரி: போகி பண்டிகையன்று, டயர், ரப்பர், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை எரிக்க வேண்டாம் என சுற்றுச்சூழல் துறை வேண்டும்கோள் விடுத்துள்ளது. இது குறித்து அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சிறப்பு செயலர் மற்றும் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் தாம் போகிப் பண்டிகை கொண்டாடுகிறோம். இந்நாளில், சில பழைய பொருட்களை எரிப்பதென்பது நம்மிடையே காலந்தொட்டு வரும் ஒரு வழக்கமாகும். ஆனால், போகியன்று இன்றைய சூழ்நிலையில் மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் டயர், ரப்பர், பிளாஸ்டிக் போன்ற பொருட்களையும் எரிப்பதால் நச்சுப் புகை மூட்டம் ஏற்பட்டு மக்களுக்கு சுவாச நோய்கள், இருமல் மற்றும் நுரையீரல், கண், மூக்கு, எரிச்சல் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், நச்சுக்காற்றாலும், கரிப்புகையாலும் காற்று மாசுபட்டு சுற்றுச்சூழல் சீர்கேடு அடைகிறது. பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதனால், புற்றுநோய் விளைவிக்கக்கூடிய டைஆக்ஸின் மற்றும் பியுரான் என்கின்ற நச்சுக் காற்று வெளிப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் போகி பண்டிகையன்று, டயர், ரப்பர், பிளாஸ்டிக் பொருட்கள், தெர்மோகால், செயற்கை இழைத்துணி போன்ற பொருட்களை எரிக்க வேண்டாம். பொங்கல் திருநாளை மிக்க மகிழ்ச்சியுடனும், மாசற்ற சுற்றுச்சூழலுடனும் கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை