உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

அரியாங்குப்பம் : இரு வார துாய்மை பணி நிகழ்ச்சியையொட்டி, தவளக்குப்பத்தில் சுற்றுச்சூழலை, பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், சுத்தமான குடிநீர், சுற்றுச்சூழலை பாதுகாப்பது, துாய்மை பணி ஆகியவற்றை வலியுறுத்தி, தவளக்குப்பத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. ஊர்வலத்தை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், உதவி பொறியாளர் நாகராஜன், இளநிலை பொறியாளர் சரஸ்வதி, வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், செழியன், தொகுதி தலைவர் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். தனியார் பள்ளி, மாணவர்கள், துாய்மை பணி செய்யும் ஊழியர்கள், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் பங்கேற்றனர். ஊர்வலம், தனியார் கண் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு, தவளக்குப்பம் சந்திப்பு வழியாக சென்று மீண்டும் மருத்துவமனையை வந்தடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி