உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இ.பி.எப்., ஓய்வூதியர்கள் கருத்தரங்கு

இ.பி.எப்., ஓய்வூதியர்கள் கருத்தரங்கு

புதுச்சேரி: வருங்கால வைப்பு நிதி மூலம் ஓய்வூதியம் பெறுவோர்கள் கருத்தரங்கு, அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன அலுவலகத்தில் நடந்தது.புதுச்சேரி இ.பி.எப்., பென்ஷனர்கள் சங்க தலைவர் ராமக்கிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் குணசேகரன் வரவேற்றார்.சென்னை சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, உதவி தலைவர் சாந்தாராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில், குறைந்தபட்ச பென்ஷன் மாதம் ரூ. 9,000 பஞ்சப்படியுடன் வழங்க வேண்டும், இ.பி.எப்., பென்ஷனர்களுக்கு இ.எஸ்.ஐ., திட்டத்தில் இலவச மருத்துவ சிகிச்சை, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரயில்வே கட்டண சலுகை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை