மேலும் செய்திகள்
ஆசிரியர் பணி நிறைவு; பள்ளியில் பாராட்டு விழா
23-Jan-2025
புதுச்சேரி: அரும்பார்த்தபுரம் திரு.வி.க. அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான நன்னெறி பயிற்சி முகாம் நடந்தது.ஆசிரியை சுகிலீலா வரவேற்றார். தலைமை ஆசிரியர் வாசு தலைமை தாங்கினார். பொறுப்பாசிரியர் சுரேஷ், ரத்தின விநாயகம் முன்னிலை வகித்தனர்.புதுச்சேரி மாநில மனிதவள மேம்பாட்டு ஆலோசனை மற்றும் பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் அரிமதி இளம்பரிதி கலந்து கொண்டு, தன்னம்பிக்கை, திறன்கள் மேம்பாடு, உயர் எண்ணங்கள், தாழ்வு மனப்பான்மையால் ஏற்படும் தடைகள், முடிவெடுக்கும் ஆற்றல், போட்டி தேர்வுகளை எழுதும் முறைகள், பேச்சுக் கலை,தலைமை பண்புகள், பொதுத்தேர்வினை தன்னம்பிக்கையோடு எழுதி அதிக மதிப்பெண் பெறும் வழிமுறைகள், போதை, மது மற்றும் திரை கவர்ச்சியால் ஏற்படும் கவன சிதறல்கள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளித்தனர்.பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் எலியாஸ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஓவிய ஆசிரியர் அன்பழகன் செய்திருந்தார்.
23-Jan-2025