மேலும் செய்திகள்
போலீசாருக்கான கண் பரிசோதனை முகாம்
02-May-2025
இலவச கண் பரிசோதனை நெல்லிக்குப்பத்தில் முகாம்
19-May-2025
Playoff வாய்ப்பை தக்க வைக்குமா டெல்லி?
18-May-2025
புதுச்சேரி: புதுச்சேரி சுய்ப்ரென் வீதியில் உள்ள வர்த்தக சபை அலுவலகத்தில் இலவச கண் பரிசோதனை சிறப்பு முகாம் இன்று (22ம் தேதி) நடக்கிறது.இதுகுறித்து வர்த்தக சபை தலைவர் குணசேகரன் அறிக்கை:புதுச்சேரி வர்த்தக சபை, ஜோதி கண் பராமரிப்பு மையம் சார்பில், இன்று (22ம் தேதி) காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, பாரதி பூங்கா எதிரே உள்ள வர்த்தக சபை அலுவலக வளாகத்தில் இலவச கண் பரிசோதனை சிறப்பு முகாம் நடக்கிறது.முகாமில், சிறந்த கண் மருத்துவர்களைக் கொண்டு பார்வைக் குறைபாடு, கண் கண்ணாடி பரிசோதனை, கண்புரை மற்றும் கருவிழிப் படல பிரச்னைகள், கண் அழுத்த நோய், சர்க்கரை நோய் விழித்திரை பாதிப்பு, கண்களில் ஏற்படக்கூடிய தொற்றுகள், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனைகள், சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. இதில், வர்த்தக சபை உறுப்பினர்கள், குடும்பத்தினர், வியாபாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் சிறப்பு முகாமை தவறாமல் பயன்படுத்தி பயனடையுமாறு வர்த்தக சபையின் சார்பில், கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.
02-May-2025
19-May-2025
18-May-2025